UAE Tamil Web

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு புதிய அறிவுரையை வழங்கிய துபாய் துணைத்தூதரகம்..!

Indian-Consulate-in-Dubai

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான OCI (Overseas Citizens of India) அட்டை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றினை துபாயில் உள்ள துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில்,” வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர் ஒவ்வொரு முறை பாஸ்போர்ட் புதுப்பித்தலின்போதும் தங்களுடைய OCI கார்டை புதுக்கத் தேவையில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“20 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வெளிநாட்டு பாஸ்போர்ட் புதுப்பித்தலின்போது தங்களுடைய OCI கார்டை புதுப்பிக்கவேண்டாம்” என துபாய் துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 வயது பூர்த்தியடைந்தவருக்கு புது பாஸ்போர்ட் வழங்கப்படும் போது மட்டுமே OCI கார்டை அவர் புதுப்பிக்க வேண்டும்.

மேலும் OCI கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெற்ற மூன்று மாதத்திற்குள் ஒவ்வொரு முறையும் தங்களது ஆன்லைன் பாஸ்போர்ட் பிரதியையும் புகைப்படத்தையும் சமர்ப்பிக்கவேண்டும். வெளிநாடு மற்றும் வெளிநாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட பெண்களை மணந்த இந்தியக் குடிமகன்கள் அல்லது OCI கார்டு வைத்திருப்பவரும் இதே நடைமுறையை மேற்கொள்ளவேண்டும். மேலும், திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்தியாவைச் சேர்ந்த மனைவியின் இந்திய பாஸ்போர்ட் / OCI கார்டு வைத்திருப்பவருடைய மனைவியின் பாஸ்போர்ட் அல்லது OCI கார்டு ஆகியவற்றையும் இணைக்கவேண்டும்.

“OCI இதர சேவைகள் போர்டலில் இந்த முடிவுகள் அமல்படுத்தப்பட மே மாத இறுதிவரையில் ஆகலாம். ஆகவே, தங்களது OCI கார்டை எந்தவொரு பயன்பாட்டிற்காகவும் சமர்ப்பித்து அதற்கான புதுப்பித்தல் பணிகளைப் பெற தாமதமாகலாம். சேவை இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian-Consulate-in-Dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap