குஜராத்தை கல்வி மையமாக ஊக்குவிக்கும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம்..!

Indian consulate in Dubai promotes Gujarat as education hub

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இந்தியாவின் குஜராத்தை கல்வி மையமாக ஊக்குவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தை இந்தியாவில் கல்வி மையமாக உயர்த்துவதற்காக, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் துபாயில் ரோட்ஷோ ஒன்றை நடத்தவுள்ளது, என்று புதன்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோட்ஷோவில், குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடசாமா தலைமையிலான தூதுக்குழு, அதனுடன் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி முதன்மை செயலாளர் அஞ்சு சர்மா பங்கேற்கிறார், என்றும் அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வு ‘Study in Gujarat’ பிரச்சாரத்தின் கீழ் ஷேக் சயீத் சாலையில் உள்ள ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் நடைபெற உள்ளது.

மேலும், இதில் கூடுதல் விவரங்களை வழங்க குஜராத்தைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 4 கல்லூரிகளின் பிரதிநிதிகள் ரோட்ஷோவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Loading...