UAE Tamil Web

துபாயிலிருந்து இந்தியா சென்ற பயணியின் 2 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை சுக்குநூறாக உடைத்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் – குவியும் கண்டனங்கள்..!

Broken Watch

கர்நாடக மாநிலம் பட்கலைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் துபாயில் சொந்தத் தொழில் நடத்திவரும் தனது சகோதரரான இப்ராஹீமைக் காண கடந்தவாரம் துபாய் வந்திருந்திருக்கிறார். அப்போது இப்ராஹீம் ஆடேமர்ஸ் பிகுயேட் என்னும் ஆடம்பர கைக்கடிகாரத்தினை இஸ்மாயிலுக்கு பரிசாக அளித்திருக்கிறார்.

2 லட்சம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள கைக்கடிகாரத்துடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார் இஸ்மாயில். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இஸ்மாயிலை தனியாக அழைத்துச் சென்று அவரது கைக்கடிகாரம் குறித்து விசாரித்திருக்கின்றனர். அதிகாரிகளின் வேண்டுகோளிற்கு இணங்கி, கைக்கடிகாரத்தை அளித்திருக்கிறார் இஸ்மாயில்.

இஸ்மாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே, சுத்தியலால் கைக்கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரி ஒருவர் உடைத்திருக்கிறார். இதனால் 6 துண்டுகளாக கடிகாரம் சிதறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, தங்கம் கடத்தி வந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், அதன்காரணமாகவே கைக்கடிகாரம் உடைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அலட்சியத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

தனக்கு கைக்கடிகாரம் பழைய நிலையில் திரும்ப வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தினைத் தரவேண்டும் என இஸ்மாயில் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் 50,000 திர்ஹம்ஸ் மட்டுமே தரமுடியும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து கோழிக்கோடு காவல்நிலையத்தில் இஸ்மாயில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய இஸ்மாயில்,” அந்த வாட்ச் எங்களது குடும்பத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் இருந்துவருகிறது. வாங்கும்போது அதன் விலை 2,26,000 திர்ஹம்ஸ் ஆகும். தற்போது அதன் மதிப்பு 2 லட்சம் திர்ஹம்ஸ்க்கு குறையாது. கைக்கடிகாரத்தில் எவ்வளவு தங்கத்தைக் கடத்த முடியும்? அதிகாரிகள் கொஞ்சம் சிந்தித்து செயல்படவேண்டும்” என்றார்.

சில சமயங்களில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களில் தங்கம் அல்லது வைரத்தினை சிலர் கடத்திவருவார்கள். இருப்பினும் அதற்குரிய சுங்கக் கட்டணத்தை செலுத்த அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கவேண்டும் அல்லது பொருளை கைப்பற்றி, தேர்ந்த தொழில்நுட்ப நபர் மூலமாக கைக்கடிகாரமானது பிரித்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கவேண்டும் என கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு KM.பஷீர் தெரிவித்தார்.

உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டால் அதனை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

Broken Watch
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap