UAE Tamil Web

மஹ்சூஸ் டிராவில் வெற்றிபெற்ற 1 லட்சம் திர்ஹம்ஸை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் இந்தியர்..!

சமீபத்தில் நடந்த 62வது மஹ்சூஸ் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.

துபாயில் பணிபுரியும் 51 வயதான விமான இன்ஜினியர் ஜோதி என்பவர் துபாயின் 62வது மஹ்சூஸ் டிராவில் 1 லட்சம் திர்ஹம்ஸை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். இந்த பெரும் தொகையையும் நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறினார். நான் பல தொண்டு சேவைகளை செய்து வருகறேன், வெற்றிபெற்ற இந்த தொகை சேவைகள் செய்வதற்கு உதவும், அனைவரும் மஹ்சூஸ் டிராவில் பங்குபெற்று தங்களது அதிர்ஷ்டத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜோதி.

மேலும் இந்த 62வது வாராந்திர மஹ்சூஸ் டிராவில் 13 அதிர்ஷ்டசாலிகள் ஒவ்வொருவரும் 1 லட்சம் திர்ஹமஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

11 Shares
Share via
Copy link