UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியர்கள் இனி சொந்த ஊரிலிருந்து போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெறத் தேவை இல்லை – இந்திய தூதரகம் அறிவிப்பு..!

embassy of India

அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது பணி, கல்வி, இமிகிரேஷன், உரிமம் பெறுதல் மற்றும் பிற காரியங்களுக்காக இந்தியாவில் தங்களது ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். இதுவே போலீஸ் கிளியரன்ஸ் செர்டிஃபிகேட்  (Police Clearance Certificate – PCC) எனப்படுகிறது.

இந்த விதிமுறை வெகுநாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தநிலையில் இந்த விதிமுறையை தற்போது எளிமையாக்குவதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அலைச்சல், நேரம் மற்றும் பணவிரயம் ஆகியவற்றைத் தவிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்கு எளிய முறையில் சேவைகளை வழங்கிட முடிவெடுத்துள்ளதாகவும் அதன் நீட்சியே இந்த அறிவிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ் தேவைப்படுவோர் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பங்களைக் கையாண்டு வரும் பிஎல்எஸ் இன்டர்நேஷனல் (BLS International) நிறுவனத்திற்கு சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

embassy of India
3 Shares
Share via
Copy link