அமீரகத்தில் மறைந்த ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு துபாயில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரக சேவைகள் இன்று திங்கள்கிழமை இடைநிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள அனைத்து அவுட்சோர்ஸ் தூதரக சேவை வழங்குநர்களின் மையங்களும் (அதாவது, BLS இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் IVS குளோபல் சர்வீசஸ்) இன்று (மே 16) மூடப்படும் என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த நாளில் BLS மற்றும் IVS உடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஸ்லாட்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு திருத்தப்பட்ட (மாற்று தேதியிட்டு) ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசரநிலை (மருத்துவப் பிரச்சினைகள் அல்லது இறப்பு) ஏற்பட்டால், இந்தியப் பிரஜைகள் @pbskdubaiஐ Twitterல் தொடர்பு கொள்ளலாம், மேலும் கட்டணமில்லா அலைபேசி எண்ணில் (80046342) அழைக்கலாம் அல்லது பின்வரும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்:
passport.dubai@mea.gov.in
vcppt.dubai@mea.gov.in
feedback@blsindiavisa-uae.com
இரண்டு தூதரகங்களும் நாளை மே 17 செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அமீரகத்தின் முன்னாள் ஜனாதி அமரர் திரு. ஷேக் கலீஃபா தனது 73வது வயதில் கடந்த மே 13 வெள்ளிக்கிழமை காலமானார். ஆகவே அமீரகம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.