UAE Tamil Web

Emirates Hillsல் உள்ள அல்ட்ரா பிரைம் வீடுகள்.. இரண்டாவது விலையுயர்ந்த வில்லாவை வாங்கிய “இந்திய தொழிலதிபர்” – என்ன விலைக்கு வாங்கினார் தெரியுமா?

Emirates Hills பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய வில்லா Dh102.8 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது, இது அப்பகுதியில் விற்பனையான இரண்டாவது விலை உயர்ந்த கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 38,000 சதுர அடி உள்ள இடத்தில், 20,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வில்லா மால்டா நாட்டு தொழிலதிபர் ஒருவரால் இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.

Emirates Hills என்பது மாண்ட்கோமரி கோல்ஃப் கிளப்பைச் சுற்றியுள்ள இயற்கை அழகு நிறைந்த தெருக்களில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இடம். அழகிய சூழலில் அமைந்துள்ள பிரம்மாண்ட வில்லாக்களின் வரிசையைக் கொண்ட ஒரு இடம்.

இந்திய தொழிலதிபர் வாங்கிய இந்த வில்லாவில் கோல்ப் மைதானம், வீட்டிற்குள் நீச்சல் குளம், சினிமா தியேட்டர் என்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நமது அரசாங்கத்தால் இந்த தொற்றுநோயை வெற்றிகரமாகக் கையாண்டதன் பலனாக தற்போது அதிக எண்ணிக்கையிலான உயர் நிகர மதிப்புள்ள நபர்கள் எமிரேட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். துபாயில் உள்ள அல்ட்ரா-பிரைம் வீடுகளுக்கு தற்போது மிக அதிக தேவை உள்ளது என்றால் அது மிகையல்ல.

அமீரகத்தின் பாம் ஜுமேரா, எமிரேட்ஸ் ஹில்ஸ், ஜுமேரா பே தீவு மற்றும் டவுன்டவுன் போன்ற இடங்களில் விலைகள் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்பதும் நினைவுகூரத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap