UAE Tamil Web

அமீரகத்தில் இருக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு துணைத் தூதர் வெளியிட்ட அறிவுரை..!

aman puri

துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதரக அதிகாரி டாக்டர். அமன்பூரி ராஸ் அல் கைமாவில் உள்ள  இந்தியத் தொழிலாளர்களுடன் காலைச் சிற்றுண்டி அருந்தினார். அப்போது அமீரகவாழ் இந்தியர்கள் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிதி மேலாண்மை குறித்தும் தெளிவு பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Naturell LLC நிறுவனத்தில் ராஸ் அல் கைமாவில் உள்ள டாபர் இந்தியா கேம்பஸ்-ல் இந்த நிகழ்வு நடைபெற்றது. துணைத் தூதருடன் காலைச் சிற்றுண்டி என்ற (Breakfast with the Consul-General) நிகழ்ச்சியின் மூலமாக தொழிலாளர்களுடன் அவர் உணவு உட்கொண்டார்.

அப்போது பேசிய துணைத் தூதர்,” சந்தையில் தேவைப்படும் திறமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு இவற்றில் இன்னும் மாறுதல்கள் ஏற்படலாம். எதிர்காலத்திற்கு தக்கபடி புதிய திறமைகளை தொழிலாளர்கள் கற்றுக்கொள்வதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

நிதி மேலாண்மை குறித்தும் தொழிலாளர்கள் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிவித்த அவர்,” அமீரகத்தில் பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பலர் வேலைதேடி அமீரகம் வருவதை நாங்கள் அறிகிறோம். வங்கியில் கணக்கு துவங்குவது, எதிர்காலத்திற்கான சேமிப்பு, குடும்பத்திற்கான காப்பீடு ஆகியவை குறித்து தொழிலாளர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும்” என்றார்.

aman puri
0 Shares
Share via
Copy link