UAE Tamil Web

பணம் பிரச்சினையில்லை; உடனடியாக துபாய் வரவேண்டும்” தனி விமானத்தில் துபாய் வந்திறங்கிய இந்தியக் குடும்பம் – கட்டணத்தைக் கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள்..!

Mushtaque-and-his-family_

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமைச் சேர்ந்த முஷ்டாக் அன்ஃபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு தனிவிமானத்தில் துபாய் வந்தடைந்தனர். இந்த தனி விமானத்தை 54,67,185 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறார் அன்ஃபர்.

ஔத் அல் அன்ஃபர் பெர்ஃபியூம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்ஃபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியா சென்றிருக்கின்றனர். இங்கிருந்து மும்பை சென்று பின்னர் தனது சொந்த ஊருக்குச் செல்வதே இவரது வழக்கம். காரணம், கவுஹாத்தி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவது கிடையாது.

ஆனால், இந்தியா – அமீரகம் இடையே விமானப்போக்குவரத்துத் தடை இருப்பதால் துபாயைச் சேர்ந்த விமான நிறுவனத்தினை நாடி, தனி விமானத்தினை இயக்க ஏற்பாடு செய்துள்ளார் அன்ஃபர். இதற்காக 54,67,185 ரூபாயைக் கட்டணமாக செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் 10 நாட்களுக்குப் பிறகே விமானம் இயக்கப்பட்டது என அன்ஃபர் தெரிவித்தார்.

“இந்தியாவில் நெடுநாள் தங்குவது அமீரகத்தில் நடைபெற்றுவரும் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்பதால் பணத்தைப் பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுத்தேன்” என்கிறார் அன்ஃபர்.

மேலும் அவர் பேசுகையில்,” இந்தியாவில் இருந்து கடைசி நேரத்தில் எங்களால் கிளம்பமுடியாமல் போனதற்குக் காரணம் PCR பரிசோதனையை எங்களால் எடுக்கமுடியாமல் போனதே. பரிசோதனை எடுத்து எங்களது பயணத்தை உறுதிசெய்வதற்குள் தடை அமல்படுத்தப்பட்டுவிட்டது” என்றார்.

கவுஹாத்திக்கு கடைசியாக சென்றாண்டு ஜூலை 3 ஆம் தேதி அமீரகத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சர்வதேச விமானம் இயக்கப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் சர்வதேச விமானம் அங்கே தரையிரங்கியிருக்கிறது.

வெறும் 8 இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த சிறப்பு விமானத்தில் முஷ்டாக் அன்ஃபர் அவரது மகன் அப்துல்லா அன்ஃபர் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் துபாய் திரும்பியுள்ளனர்.

Mushtaque-and-his-family_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap