UAE Tamil Web

ஷார்ஜா: மகளின் தேர்வு முடிவுகளைக் கேட்டவுடன் மயக்கமடைந்த இந்திய தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்..!

-Jose-Varghese

ஷார்ஜாவில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் வர்கீஸ் தனது மகளின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த அன்றே உயிரிழந்திருப்பது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷார்ஜாவில் பட்டைய கணக்காளராக பணிபுரிந்துவந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜோஸின் குடும்பம் கேரளாவில் வசித்துவருகிறது. நேற்று வெளியான CBSE தேர்வு முடிவில் இவரது மகள் டோன்னா எலிசபத் 96 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். தனது மகளின் மதிப்பெண்ணைக் கேட்ட மாத்திரத்தில் ஜோஸ் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஜோசிற்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்திருக்கிறது. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையும் நெகட்டிவ் என வந்திருப்பதால், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தேர்ச்சியை கொண்டாடும் விதமாக வீட்டிலேயே பார்ட்டி ஒன்றை ஆசையாய் எலிசபத் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த மரணச் செய்தி அவரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் குடும்பமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக எலிசபத்தின் அண்டை வீட்டார் கவலையுடன் தெரிவித்தனர்.

-Jose-Varghese
2 Shares
Share via
Copy link