UAE Tamil Web

பிக் டிக்கெட் டிராவில் 12 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்..!

family

பிக் டிக்கெட் டிராவில் 12 மில்லியன் திர்ஹம்ஸை இந்தியர் ஒருவர் வென்றுள்ளார்.

- Advertisment -

ஷார்ஜாவில் வசிக்கும் கர்நாடகாவில் உள்ள சிமோகா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சிவமூர்த்தி கிருஷ்ணப்பா இந்த பரிசு தொகையினை தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு 10 வயதில் ஒரு குழந்தையும் 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

இவர் வெற்றி பெற்ற பிக் டிக்கெட்டின் எண் 202511 ஆகும். இந்த டிக்கெட்டை இவர் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வாங்கியுள்ளார்.

இது குறித்து வெற்றி பெற்ற கிருஷ்ணப்பா கூறும்போது, வீட்டிலிருந்து பிக் டிக்கெட் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வெற்றி பெற்றதை தொலைபேசி வாயிலாக அவர்கள் கூறும்போது என்னால் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறினார்.

கனவு நனவானது:

வெற்றி பெற்ற பணத்தில் இவரது சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள சிமோகா மாவட்டத்தில் தனது குடும்பத்திற்காக பெரிய வீடு ஒன்று கட்ட ஆசைபடுவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வெற்றி பெற்ற பணத்தில் பெரும் தொதையை டெப்பாசிட் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் 2005 லிருந்து துபாயில் மெக்கானிக் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு மாதமும் பிக் டிக்கெட் வாங்கி வருகிறார். பெரும்பாலும் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய சொந்த பணத்தில் பிக் டிக்கெட் வாங்கி வந்த நிலையில் இந்த முறை வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை வழக்கமாக தொடர்ந்து பிக் டிக்கெட்டை வாங்குபவர்களுக்கு 2 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் சிறப்பு ஆஃபர் ஒன்றையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிக் டிக்கெட் பரிசு தொகையை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். அதில் முதல் பரிசாக 10 மில்லியன் திர்ஹம்ஸும், இரண்டாம் பரிசாக 5 மில்லியன் திர்ஹம்ஸும், 8 அதிர்ஷடசாலிகளுக்கு ரொக்க பணமும், ரேஞ் ரோவர் காரும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.