UAE Tamil Web

“நேற்றுவரை தொழிலாளர்கள் இனி கோடீஸ்வரர்கள்” – மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுபெற்ற இந்தியர்கள்..!

VINOD-AND-RUSTAMKHAN

ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் இந்தியாவைச் சேர்ந்த ரஸ்டம்கான் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.

ஆறு எண்களில் ஐந்து எண்களை (2-19-27-43-47-49) சரியாக தேர்ந்தெடுத்திருந்த இருவருக்கும் தலா 5 லட்சம் திர்ஹம்ஸ் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ரஸ்டம்கான் (34) காய்கறி மற்றும் பழக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்துவருகிறார். கடந்த 10 வருடங்களாக துபாயில் வசித்துவரும் இவர் இதுகுறித்துப் பேசுகையில்,” என்னுடைய மகளின் பிறந்தநாள் இந்த வாரத்தில் தான் கொண்டாடப்பட்டது. என்னுடைய அதிர்ஷ்டம் அவள். இந்தப் பரிசுத்தொகை மூலமாக எனது குடும்பத்தை நான் அமீரகத்திற்கு கூட்டிவருவேன். ஏனெனில் துபாயை எனது சொந்த ஊராகவே பார்க்கிறேன்” என்றார்.

மேலும், தனது சொந்த ஊரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தத் தொகை மூலமாக உதவ இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு வெற்றியாளரான வினோத் (43) கப்பலில் தொழிலாளராக பணிபுரிந்துவருகிறார். இந்தப் பரிசுத்தொகை குறித்து அவர் பேசுகையில்,” என்னுடைய வாழ்க்கையில் இந்தப் பரிசுத்தொகை கடலளவு வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை பெரிய பெரிசு எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை நம்பவே என்னால் முடியவில்லை. எனது மனைவி இதுவரையில் அமீரகத்திற்கு வந்ததில்லை. ஆகவே, என் மனைவியை அமீராகத்திற்கு அழைத்துவர இருக்கிறேன். பரிசுச் செய்தியை முதலில் அவளிடம் தான் போனில் தெரிவித்தேன். அவளாலும் இதனை நம்ப முடியவில்லை. எங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் ஒரே நாளில் முடிவிற்கு வந்துவிட்டதைப்போல உணர்கிறேன்” என்றார்.

மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

VINOD-AND-RUSTAMKHAN
0 Shares
Share via
Copy link