இந்தியரான குணால் நாயக் அமீரகத்தில் நீண்ட காலமாக ரேஃபிள் டிராவில் வெற்றி பெற தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்து வரும் நபர்களில் ஒருவர். இந்த முறையும் தனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் அவரை அழைத்து பேசியபோது தான் தான் 77,777 திர்ஹம்களை வென்றதை அவர் உணர்ந்துள்ளார்.
எதேர்ச்சியாக அவருக்கு வந்த Dh77,777 வென்ற வாழ்த்துச்செய்தி அவரது மெயிலின் Junk பகுதியில் சென்று சேர்ந்துள்ளது. இறுதியில் போட்டி முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்த அவரது நண்பர்கள் அவருக்கு அழைத்து வாழ்த்துக்கள் சொன்னபோது தான் அவர் Dh77,777 வென்றதை கவனித்துள்ளார் இந்தியரான குணால்.
துபாயில் Accounting துறையில் பணிபுரியும் குணால் மேலும் கூறுகையில், “எமிரேட்ஸ் டிராவுக்கு இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கவிரும்புகிறேன். எனது தந்தை இந்த ஆண்டு ஓய்வு பெறுவதால், அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதால், அந்தப் பணத்தின் ஒரு பகுதியை எனது பெற்றோருக்கு உதவப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்றார் அவர்.
“மீதமுள்ள தொகையை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று என் மனைவி என்னிடம் கூறிவருகிறார்” என்றார் அவர்.
“எனது நண்பர்கள் கடைசியாக டிராவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், திரையில் என் பெயரைப் பார்த்ததும், அவர்கள் உடனடியாக என்னை வாழ்த்துவதற்காக குறுஞ்செய்தி அனுப்பினார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது”.
“குறிப்பாக எமிரேட்ஸ் டிராவில் நான் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளேன். அந்தத் தொகை 77 திர்ஹம்கள், எனவே 77,777 திர்ஹம்களை வென்றது என்பது உண்மையில் எனக்கு பெரிய மகிழ்ச்சி” என்றார் அவர்.