UAE Tamil Web

இந்தியாவைச் சேர்ந்த சமையல்காரரை கோடீஸ்வரராக்கிய அபுதாபி பிக்டிக்கெட்..!

Big-ticket

அபுதாபி பிக் டிக்கெட்டின் வாராந்திர டிராவில் இந்தியாவின் ரஃபீக் முகமது அகமது என்பவருக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. கேரளாவின் கோழிக்கோடைச் சேர்ந்த ரஃபீக் துபாயில் செஃப்-ஆகப் பணிபுரிந்துவருகிறார்.

135561 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை வாங்கியிருந்த ரஃபீக்கிற்கு தற்போது 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அவர்,” எனக்கு ஊரில் கடன்கள் இருக்கின்றன. எனது சகோதரி திருமணத்திற்காக வாங்கிய கடன்கள் அவை. இப்போது இந்தப் பரிசின் மூலம் அதிலிருந்து வெளியேறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் கஷ்டப்படும் சிலரை காப்பாற்ற இந்தப் பரிசுப் பணத்தை செலவிட இருக்கிறேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாதம் 2200 திர்ஹம்ஸ் ஊதியத்தில் பணிபுர்ந்துகொண்டிருந்த ரஃபீக் பிக் டிக்கெட்டினால் தற்போது கோடீஸ்வரராகி உள்ளார். இந்தப் பரிசுத் தொகையை 9 பேருடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிக் டிக்கெட்டில் கலந்துகொள்வது எப்படி என விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Big-ticket
2 Shares
Share via
Copy link