26.6 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

எமிரேட்ஸ் லோட்டோவின் முதல் குலுக்கலில் 3,50,000 திர்ஹம்ஸ் பணத்தை பரிசாக தட்டிச்சென்ற இந்தியர்..!

lotto

கடந்த வார இறுதியில் நடைபெற்ற எமிரேட்ஸ் லோட்டோவின் தொடக்க டிராவில் துபாயைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் முகமது காலித் 3,50,000 திரஹம்ஸ் ரொக்கப் பரிசு பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். டிராவில் ஆறு எண்களில் ஐந்து எண்கள் பொருந்தி வெற்றி பெற்றவர் இவர் மட்டுமே.

காலித் ஒரு டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியர் ஆவார். 20 வருடத்திற்கு முன்பாக தனது சொந்த நாடான இந்தியாவில் இருந்து துபாய் வந்துள்ளார்.

இது குறித்து காலித் கூறும்போது, எங்களின் எண்கள் வெற்றி பெற்ற எண்களோடு பொருந்துவதை எங்கள் கண்களால் நம்ப முடியவில்லை. எமிரேட் லோட்டோவிலிருந்து தொலைபேசி வழியாக எங்களை தொடர்பு கொண்டு வெற்றியை உறுதி செய்த போதுதான் உண்மையாகவே வெற்றி பெற்றுவிட்டோம் என நம்பினோம் என்று கூறினார்.

தான் வெற்றி பெற்றால் பணத்தை எவ்வாறு செலவிடலாம் என்று காலித் முன் கூட்டியே திட்டமிட்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் கனடா நாட்டில் இருக்கிறார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக விமான சேவைகள் தடை செய்யப்பட்டிருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. இந்நிலையில் வெற்றி பெற்ற பணத்தை தனது குடும்பத்தினருக்கு கொடுப்பதாகவும், அதன்பின்பு மனதில் நெருக்கமாக இருக்கும் ஒரு காரணத்திற்காக செலவிட இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, வெற்றி பெற்ற பணத்தின் பெரும் பகுதியை ‘10 மில்லியன் ரமலான் உணவு’ (10 million meals) திட்டத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இத்திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷைகா ஹிந்த் பிண்ட் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அவர் கூறும்போது, தற்போது நான் மற்றவர்களுக்கு உதவக் கூடிய இடத்தில் இருக்கிறேன். இதன்மூலம் நான் பெற்ற மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் என்னால் கொடுக்க முடியும் என்று உணர்வுப் பூர்வமாக கூறினார்.

இது பற்றி எமிரேட்ஸ் லோட்டோ தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டியன் கூறும்போது, “எமிரேட்ஸ் லோட்டோவின் மூலம் நாங்கள் ஒருவரது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குகிறோம். முகமது காலித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் அவருடைய தாராள குணத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, காலித் மற்றவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக்குவார். உண்மையிலேயே நாங்கள் அவருடன் துணை நிற்கிறோம்” என்று பெருமிதம் கொண்டார்.

அடுத்த எமிரேட்ஸ் லோட்டோ லைவ் டிரா வரும் சனிக்கிழமை நடைபெறும். அதே சமயம் அடுத்த வாரம் ரமலான் மாதம் ஆரம்பித்து விடும் என்பதால் புனித ரமலான் மாதம் முழுவதும் இரவு 10 மணிக்கு டிரா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் லோட்டோ டிராவை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



error: Alert: Content is protected !!