UAE Tamil Web

பணத்திற்காக கத்தி முனையில் மிரட்டப்பட்ட இந்தியர் – உதவிக்கு ஓடிவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள்..!

Knife_generic_

ஜெபல் அலி பகுதியில் கடந்த வாரம் இந்தியர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது நைஜீரியாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று வழிமறித்திருக்கிறது. 39 வயதான இந்தியரின் கழுத்தில் கத்தி வைத்த கும்பல் அவரிடம் இருந்த 1600 திர்ஹம்ஸ் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.

இதுகுறித்து அவர் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் திருட்டு சம்பவம் நடந்த மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பகுதி வழியே நடந்து சென்றிருக்கிறார் இந்தியர். அப்போது இவரிடம் இருந்து பணம் பறித்த இளைஞர் வேறு ஒருவரிடம் பணம் பறித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

திருடனிடம் வாக்குவாதம் செய்ய, இந்தியருக்கு உதவியாய் அங்கிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள் சிலர் ஓடிவந்து திருடனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர்.

ஆனால், மற்ற குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை. இந்த வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தக்கநேரத்தில் இந்தியருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள் உதவியதால், குற்றவாளி பிடிக்கப்பட்டிருக்கிறார்.

Knife_generic_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap