UAE Tamil Web

“பணத்தைவிட மனிதாபிமானம் முக்கியம்” – மரணதண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவருக்கு வேலை அளிப்பதாக லூலூ மால் அதிபர் யூசப் அலி அறிவிப்பு..!

Convict_

லூலூ மாலின் அதிபர் யூசப் அலியின் தயாள குணத்தால் மரணதண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கிருஷ்ணன் நேற்று இரவு அமீரகத்திலிருந்து இந்தியா சென்றடைந்தார்.

சூடானைச் சேர்ந்த 12 வயது சிறுவன் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றத்தில் கிருஷ்ணனுக்கு அமீரக உச்ச நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. இதனையடுத்து 5 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை இழப்பீடாக அளித்து, இறந்துபோன சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணனை மன்னிக்கவும் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். இறுதியில் சிறுவனின் பெற்றோரும் கிருஷ்ணனை மன்னிக்கவே, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள தனது நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் கிருஷ்ணனின் தகுதிக்கு ஏற்ப ஒரு வேலை வழங்கப்படும் என யூசப் அலி அறிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் யூசப் அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதன் காரணமாகவே இம்மாதிரியான தொண்டு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுவருவதாக சிலர் தெரிவிப்பதை யூசப் அலி மறுத்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” என்னுடைய விபத்திற்குப் பிறகு அதற்குப் பதிலாக சதாகா-வில் (sadaqah) (தன்னார்வ தொண்டு நடவடிக்கைகள்) ஈடுபடுவதாக சிலர் தெரிவிப்பது உண்மையில்லை. பணத்தை விட மனித நேயம் மேன்மையானது. மனித வாழ்வை பணத்தின் மூலம் அளவிடுவது அறியாமை. மத நம்பிக்கைப்படி சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

விபத்திற்குப் பிறகு அமீரகம் திரும்பிய யூசப் அலிக்கு தண்டுவட அறுவைசிகிச்சை ஒன்றும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“கிருஷ்ணன் தனது மீதிக்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். அவருக்கு எங்களது குழுமத்தில் வேலை அளிக்கப்படும்” என யூசப் அலி தெரிவித்திருக்கிறார்.

யூசப் அலியின் இந்த அறிவிப்பிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Convict_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap