UAE Tamil Web

3 வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இந்தியர் – கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பும் காவல்துறை..!

Building_

ஷார்ஜாவின் அபு ஷாகரா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை மதியம் நைஜீரியாவைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பலுக்குள் மோதல் நடந்திருக்கிறது. சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்றுவந்த அந்தக் கட்டிடத்தில் 3 வது மாடியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த விஷ்ணு (29) என்பவர் தூக்கி வீசப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று மதியம் 2.30 மணிக்கு காவல்துறைக்கு இந்த மோதல் குறித்து தகவல் கொடுக்கப்பட, மீட்புப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

கீழே கிடந்த விஷ்ணுவின் உடலை பிணக்கூராய்விற்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கட்டிடத்தில் நடைபெற்ற மோதலில் படுகாயமடைந்தவர்களை அல் காசிமி மற்றும் அல் குவைதி மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

பயன்பாட்டு சேவைகள் துண்டிக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தில் இருந்து கத்தி, கட்டைகள் போன்றவை கிடைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களுள் சிலர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் சலூன் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக விஷ்ணு வேலைபார்த்துவந்தது தெரியவந்திருக்கிறது.

இருப்பினும் சம்பவம் நடந்த அன்று விஷ்ணு ஏன் அந்த கட்டிடத்திற்குச் சென்றார்? அவருக்கும் அந்தக் கும்பலுக்கும் என்ன தொடர்பு? அவர் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? சம்பவம் நடந்த அன்று விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? எனப் பல கேள்விகளுக்கு இந்நேரம் வரையிலும் விடை கிடைக்கவில்லை.

இனிவரும் சில நாட்களில் இதற்கான பதில்களை காவல்துறை கண்டுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Building_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap