துபாய் சர்வதேச விமான நிலையத்தின் Concourse Dயில் இன்று நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் ஓமன் நாட்டைச் சேர்ந்த இந்தியர் $1 மில்லியன் பரிசு தொகையை வென்றுள்ளார்.
ஓமன், மஸ்கட்டில் வசிக்கும் 62 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. ஜான் வர்கீஸ், கடந்த மே 29 அன்று 0982 என்ற வெற்றிகரமான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியிருந்தார். திரு. வர்கீஸ் இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் மஸ்கட்டில் உள்ள FMCG நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணிபுரிகிறார்.
வர்கீஸ், மத்திய கிழக்கில் துபாய் மற்றும் மஸ்கட் இடையே 35 வருடங்கள் பயணம் செய்து வருகின்றார். கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் நடக்கும் டிராவில் தவறாமல் பங்கேற்பவர். திரு. வர்கீஸ் தொற்றுநோய்க்கு முன் துபாய் விமான நிலையத்தில் உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் கவுன்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கினார்.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த திரு. வர்கீஸ், 1999ம் ஆண்டு மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து $1 மில்லியன் வென்ற 192வது இந்திய நாட்டவர் ஆவார். துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்திய நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
எனது வாழ்க்கைக்காக ஒரு பெரிய பகுதியை சேமிக்கவுள்ளேன், அதே நேரத்தில் ஒரு பகுதி சில தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவுள்ளேன் என்றார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அவை வழங்கப்படும் என்றார் அவர்.
மேலும் இந்த போட்டியில் துபாயில் வசிக்கும் 40 வயது இந்தியரான திரு. திம்மையா நஞ்சப்பா, மெர்சிடிஸ் பென்ஸ் காரை வென்றுள்ளார்.