அபுதாபி பிக் டிக்கெட், எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா போன்ற வாராந்திர டிராவில் ஏராளமான மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அபுதாபி பிக் டிக்கெட் டிரா, கத்தாரில் வசித்துவரும் இந்தியர் ஒருவருக்கு 5,00,000 திர்ஹம்ஸ் பரிசாக விழுந்துள்ளது. அது போல இந்த வாரத்திற்கான டிராவிலும் 5,00,000 திர்ஹம்ஸ் இந்தியருக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்துப் பேசிய கோலண்டஸ் அகமது ஷவுகத், “என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிப்ரவரியில் தான் பிறந்தன. அதனால் நான் இந்த மாதத்தினை அதிர்ஷ்டமானதாக கருதுகிறேன். நான் கடந்த ஒரு வருடமாக பிக் டிக்கெட் வாங்கிவருகிறேன். ஒவ்வொரு முறையும் அதன் முடிவுகள் வெளிவரும்போது அதனை ஆர்வத்துடன் பார்ப்பேன். இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. வெல்லும் வரையில் முயற்சியை கைவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்” என்கிறார்.
114308 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை ஷவுகத் பெற்றுருக்கிறார். இந்தப் பரிசுத் தொகை மட்டுமல்லாது மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட குலுக்களுக்கும் இந்த வெற்றி மூலம் ஷவுகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.