பிப்ரவரி மாத அபுதாபி எலக்ட்ரானிக் பிக் டிக்கெட் டிராவில் இந்தியரான அனஸ் மேலத்தலக்கல் 5 லட்சம் திர்ஹம்ஸ் வென்றுள்ளார்.
கத்தாரில் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள அனஸ் மேலத்தலக்கல் கூறுகையில், “அபுதாபி எலக்ட்ரானிக் பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. வெற்றிப் பெற்ற தொகையை வைத்து இந்தியா திரும்பவும், அங்கு தனது சொந்தத் தொழிலைத் தொடங்கவும் உள்ளேன்” என்றார்.
மேலும், கடந்த காலங்களில் எனது நண்பர்களுடன் சேர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்கி உள்ளே. ஆனால் தற்போது இந்த வெற்றிகரமான டிக்கெட்டை நானே வாங்கினேன் வெற்றி பெற்றுள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில் தொடர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளதகவும், இதுபோன்ற பெரும் பரிசை வெல்ல முயற்சி செய்வேன் என்று அனஸ் மேலத்தலக்கல் கூறினார்.
மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ள நேரலை டிராவில் அனஸ் இருப்பதால், மேலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
