UAE Tamil Web

அமீரக Mahzooz Draw.. Dh1,00,000 வென்ற இந்தியர்.. விமர்சையாக தனது திருமணத்தை நடத்த முடிவு – அம்மாவுக்கு காத்திருக்கும் Surprise!

துபாயில் செயல்பட்டு வரும் வாசனை திரவியங்கள் மற்றும் ஆக்சஸரீஸ் கடை ஒன்றில் பங்குதாரராக இருக்கும் இந்திய நாட்டவரான முகமது, அமீரகத்தில் நடந்த 79வது Mahzooz டிராவில் 1,00,000 திர்ஹம்களை ரேஃபிள் டிராவில் வென்று அசத்தியுள்ளார்.

மேலும் இந்த வாராந்திர ரேஃபிள் டிராவில் சிரியா மற்றும் மொரிஷியஸிலிருந்து வந்த இரண்டு வெளிநாட்டவர்கள் தலா 1,00,000 திர்ஹம் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வாராந்திர டிராவில் 2,365 வெற்றியாளர்கள் மொத்த பரிசுத் தொகையில் 3,000,000 திர்ஹம்களுக்கு மேல் வென்றுள்ளார்.

61 வெற்றியாளர்கள் இரண்டாம் பரிசான 2,000,000 திர்ஹங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியரான முகமது கடந்த ஆறு ஆண்டுகளாக அமீரகத்தில் வசித்து வருகின்றார், அவருடைய குடும்பத்தில் எட்டு உடன்பிறப்புகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்ய உள்ளதால், சரியான நேரத்தில் தனக்கு இந்த பணம் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். “திருமணம் என்றாலே பெரிய அளவிலான செலவு தான்”, “ஆகவே இந்த பணத்தை சரியான நேரத்தில் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

“என் திருமணச் செலவு தவிர, என் அம்மாவுக்கு (தங்கத்தாலான) அன்பு பரிசொன்று வாங்க ஆவலோடு உள்ளேன்” என்றும் முகமது கூறியுள்ளார். மேலும் முகமது தான் வென்ற பணத்தை கொண்டு தனது வணிகத்தை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap