UAE Tamil Web

எனது குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக மாறிவிட்டது : துபாய் டியூட்டி ஃப்ரீயில் 10 லட்சம் டாலர்களை வென்ற இந்தியர்..!

George-Thomas_

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் (43) கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற துபாய் டியூட்டி ஃப்ரீ டிராவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார். ஷார்ஜாவில் வசித்துவரும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் போட்டியில் பங்கேற்று வருகிறார்.

மில்லியனர் மில்லினியம் டிராவில் 355 சீரிஸில் 2016 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்தார் தாமஸ். மூன்று குழந்தைகளின் தந்தையான தாமசின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஏழு வருடங்களாக ஷார்ஜாவில் வசித்துவரும் இவர் இந்த வெற்றி குறித்துப் பேசுகையில்,” எனக்குள் இந்த வெற்றிச் செய்தி இன்னும் முழுமையாக பரவவில்லை. எனது குழந்தை எனக்கான அதிர்ஷ்டத்தை பிறப்பதற்கு முன்பே அளித்திருக்கிறது. இன்னும் கூடுதல் பொறுப்புடன் செயல்படவேண்டும் எனத் தோன்றுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக மாறியுள்ளது. துபாய் டியூட்டி ஃப்ரிக்கு நன்றி. பணத்தை அப்படியே வீட்டிற்கு அனுப்ப இருக்கிறேன். என்ன செய்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றார்.

துபாய் டியூட்டி ஃப்ரீ டிராவின் மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷன் துவங்கப்பட்ட 1999 ஆம் ஆண்டு முதல் இதுவரை தாமசுடன் சேர்த்து 179 இந்தியர்கள் 1 மில்லியன் டாலர்களை வென்றுள்ளனர். மில்லினியம் மில்லியனர் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க இந்தியர்களிடையே அதிக போட்டி நிலவுகிறது.

மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராவில் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளுக்கான அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கார்

ஷார்ஜாவில் வசித்துவரும் லெபனானைச் சேர்ந்த ஹடேம் யேஹியா (53) Mercedes Benz GLS 580 4M (Obsidian Black) காரை பரிசாக வென்றார். அவர் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் 1128 வது சீரிஸில் 1770 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஐரிஷ் வில்லேஜில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி இவர் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

கடந்த 30 வருடங்களாக ஷார்ஜாவில் வசித்துவரும் இவர் 20 வருடங்களாக இப்போட்டியில் பங்கேற்றுவருகிறார். இதுகுறித்து ஹடேம் பேசுகையில்,”என்னால் இதை நம்பமுடியவில்லை. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதியில் நான் வென்றுவிட்டேன்” என்றார்.

பைக்குகள்

துபாய் வாழ் இந்தியரான ஆர்யன் ரவீந்திர ஷெனாய் (17) BMW F 850 GS (Black/Yellow) பைக்கை வென்றார். GEMS நியூ மில்லினியம் பள்ளியில் 12 வது படிக்கும் இவர் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் 449 வது சீரிஸில் 0653 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ஆரியனின் தாயார் வித்யா ஷெனாய் பேசுகையில்,” நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக இப்போட்டியில் கலந்துகொள்கிறோம். எப்போதும் எங்களது அன்புக்குரிய மகனின் பெயரில் தான் டிக்கெட்டை வாங்குவோம்” என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த தீபக் ஷர்மா ரகுநாத் (44) Indian Scout Bobber (Jade Smoke) பைக்கை பரிசாக வென்றார். மார்ச் 25 ஆம் தேதி 450 சீரிஸில் 0643 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ஷேக் வாங்கியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர்,” அடுத்தமுறை நான் 1 மில்லியன் டாலரை வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

George-Thomas_
0 Shares
Share via
Copy link