UAE Tamil Web

வெறும் 13 இருக்கைகள் – இந்தியாவில் இருந்து தனி விமானத்தில் அமீரகம் வந்த குடும்பம் – விமானக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Private Jet

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் அமீரகம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் அல் ராஸ் நிறுவனத்தினைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாததால் ரூ.40 லட்சம் செலவழித்து தனி விமானம் மூலமாக நேற்று அமீரகம் வந்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 25 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பிடி. சியாமளன் அவர்களுடைய மகளின் திருமணம் கொச்சியில் நடைபெற்றது. இதற்காக இந்தியா சென்ற அவரது குடும்பம் விமானப் போக்குவரத்துத் தடையால் அமீரகம் வரமுடியாமல் போயிருக்கிறது.

நிறுவனத்தை குடும்ப உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வதால் அவசரமாக அமீரகம் வரவேண்டிய சூழ்நிலை உருவாகவே, ஸ்மார்ட் டிராவல் ஏஜென்சி நிறுவனத்தை நாடியிருக்கிறார்கள் இவர்கள். பயணத்திற்கு 2 லட்சம் திர்ஹம்ஸ் (ரூபாயில் சொன்னால் 40 லட்சம்) செலவாகும் என ஏஜென்சி கூறியிருக்கிறது.

இருப்பினும் நிறுவனத்தை மேற்பார்வையிட குடும்பம் அமீரகம் வந்தாகவேண்டிய சூழ்நிலை இருப்பதால் சியாமளன் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். வெறும் 13 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறப்பு விமானத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு துபாயில் உள்ள அல் மக்தூம் விமான நிலையத்திற்கு வந்திறங்கியிருக்கிறது இந்தக் குடும்பம்.