UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியருக்கு பிக் டிக்கெட்டில் விழுந்த 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு.!

bigticketlogo_

ராஸ் அல் கைமாவில் வசித்துவரும் இந்தியாவைச் சேர்ந்த அபுதாகிர் முகமது சமீபத்தில் நடைபெற்ற அபுதாபி பிக் டிக்கெட்டின் தி ட்ரீம் 12 மில்லியனின் 231 வது டிராவில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது.

தனது மனைவி , இரு மகள்கள் மற்றும் தாயுடன் ராஸ் அல் கைமாவில் வசித்துவரும் அபுதாகிர் ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். சக பணியாளர்கள் நான்கு பேருடன் இணைந்து கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி 027700 என்ற எண் கொண்ட டிக்கெட்டை முகமது வாங்கியிருக்கிறார்.

அதுதான் இவருக்கு தற்போது அதிர்ஷ்டத்தை அளித்திருக்கிறது. டிரா நடைபெறுவதை நேரடியாக பார்க்காத முகமது, விஷயத்தை தனது நண்பர் கூறியதன் மூலம் அறிந்திருக்கிறார்.

கடந்த ஒரு வருட காலமாக பிக் டிக்கெட்டில் கலந்துகொண்டுவந்தாலும் இத்தனை பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் என தான் நினைத்துப் பார்க்கவில்லை என முகமது ஆனந்தத்துடன் குறிப்பிட்டார்.

bigticketlogo_
4 Shares
Share via
Copy link