37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அங்கு செல்லவே அச்சமாக இருக்கிறது..! – இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்..!

Khusboo-and-family_

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து சேவையானது கடந்த சில மாதங்களாக ஸ்தம்பித்திருந்தது. இதனால் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் உலகம் முழுவதிலும் மக்கள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அமீரக வாழ் இந்தியர்களின் நிலையும் இதுதான். விடுமுறை, அவசர விடுப்பு என அமீரகத்தில் இருந்து தாயகம் சென்ற பல இந்தியர்களால் மீண்டும் அமீரகத்திற்கு வர இயலவில்லை.

கொரோனாவின் தாக்கம் கணிசமான அளவு குறைந்திருப்பதால் விசிட்டிங் மற்றும் சுற்றுலா விசாவில் மக்கள் அமீரகத்திற்கு வரலாம் என அமீரக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதேபோல இந்தியாவில் தவிக்கும் அமீரக வாழ் இந்தியர்கள் மீண்டும் அமீரகத்திற்கு பயணிக்க இந்திய மற்றும் அமீரக அரசுகள் ஒப்புதல் அளித்திருக்கின்றன. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தினால் இயக்கப்பட்டுவரும் சிறப்பு  விமானங்கள் மற்றும் அமீரக தனி விமானங்கள் மூலமாக இந்தியர்கள் அமீரகம் திரும்பலாம் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த மேலதிக தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டாலும் இந்தியர்கள் மீண்டும் அமீரகம் திரும்ப அமீரக அரசு விதித்திருக்கும் விதிமுறைகளினால் கலக்கத்தில் இருக்கின்றனர் இந்தியர்கள்.

சோதனை தரும் கொரோனா பரிசோதனை

அமீரகம் திரும்ப விரும்பும் மக்கள் கொரோனா பரிசோதனைக்கு (RT-PCR) தங்களை உட்படுத்திக்கொண்டு, பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்ததை சமர்ப்பிக்கவேண்டும் என அமீரக அரசு அறிவித்திருந்தது. முக்கியமாக, இந்த பரிசோதனையானது பயண தேதிக்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் தற்போது வசிக்கும் அமீரக வாழ் இந்தியர்கள் பலர், தங்களால் இந்த RT-PCR பரிசோதனையை மேற்கொள்ள இயலவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சியகம் அங்கீகரித்திருக்கும் பரிசோதனை மையங்கள், கொரோனா காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருப்பதால் தங்களால் பரிசோதனையை மேற்கொள்ள இயலவில்லை என்கிறார்கள் இவர்கள்.

பரிசோதனை மையங்கள் கிடைத்தாலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், அறிகுறிகள் இல்லாமல் வருவோருக்கு அங்கே RT-PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் தங்களால் கொரோனா பரிசோதனையை எடுத்து அமீரகம் திரும்ப முடியுமா? என்ற அச்சத்தில் பல அமீரக வாழ் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

ஆகவே, பல மாதங்களாக அமீரகம் திரும்ப முடியாமல் காத்திருக்கும் இந்தியர்களின் பயணத்திற்கு உதவி செய்யும் விதமாக, பிரத்யேக பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என பலரும் குரலெழுப்பி வருகிறார்கள்.

விடுதிகளில் தவிக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பயணத்திற்கு முன்பான கொரோனா பரிசோதனை எடுப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதேபோல, குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்லது வயது வந்தோருக்கான இடம் தவிர்த்து வேறு இடங்களில் பரிசோதனை எடுக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அங்கு செல்லவே அச்சமாக இருக்கிறது..!

எனது எட்டு வயது மகனுடன் கொரோனா பரிசோதனை நிலையத்திற்கு செல்லவே பயமாக இருக்கிறது, நோய்த்தொற்று குறித்த அச்சம் எங்களை திணறடிக்கிறது என தற்போது இந்தியாவில் வசிக்கும் அமீரக வாழ் இந்தியரான குஷ்பூ தெரிவித்தார்.

“அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரிசோதனை எடுப்பது சிரமமான காரியம் தான்” என குஷ்பூ தெரிவித்தார்.

இதையும் படிங்க.!