UAE Tamil Web

இந்தியாவிலிருந்து கத்தார் வழியாக அமீரகத்திற்குள் நுழையும் இந்தியர்கள் – செலவுதான் அதிகம்..!

REPATRIATION-FLIGHT

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்த தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் சிக்கிக்கொண்ட அமீரகவாழ் இந்தியர்கள் தங்களது வேலை பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

கோல்டன் விசா, சில்வர் விசா வைத்திருப்பவர்களுக்கு அமீரகம் வர அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. போலவே, அமீரக அரசினால் தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குறிப்பிட்ட 8 பிரிவினர் மட்டும் அமீரகத்திற்கு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் வர முடியாததால் பல சிக்கல்களை சந்தித்துவருகின்றனர்.

‘இதன்காரணமாக பிற நாடுகளுக்குச் சென்று அங்கே 14 நாட்கள் செலவிட்டு பின்னர் அங்கிருந்து அமீரகம் வருவதை பல இந்தியர்கள் கடைபிடித்துவருகின்றனர். இப்படி, பல இந்தியர்கள் முயற்சிக்கையில் அவர்களது முக்கிய தேர்வாக கத்தார் இருக்கிறது. முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கத்தாருக்கு வரலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது தான் இதற்குக் காரணம்.

இதனால் பல இந்தியர்கள் கத்தார் சென்று பின்னர் அங்கிருந்து எமிரேட்ஸ், ஃப்ளை துபாய் மற்றும் கத்தார் ஏர்வேஸ் மூலமாக அமீரகத்திற்கு வருகின்றனர். இதேபோல, மாலத்தீவுகள், செர்பியா, ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வழியாகவும் அமீரகத்திற்குள் வருகிறார்கள் இந்தியர்கள். இதுபோன்ற பயணங்களுக்கு இந்தியர்கள் 4000 – 6000 திர்ஹம்ஸ் வரையில் செலவழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் தேவை

“இந்தியா – அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தடையில் உள்ளதால் மூன்றாம் நாடுகளின் வழியாக அமீரகத்திற்குள் நுழைய இந்தியர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. ஆகவே பணம் செலுத்துவதற்கு முன்பே சரியான தகவல்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்” என ஃபாரவர் டூரிசம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

REPATRIATION-FLIGHT
17 Shares
Share via
Copy link