UAE Tamil Web

முக்கியச் செய்தி: “அந்த மெசேஜ்க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” – இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..!

consulate

கடந்த சில தினங்களாகவே அமீரக வாழ் இந்திய மக்கள் பலரும் வாட்சாப் மெசேஜ் ஒன்றினை பரப்பிவருகிறார்கள். இதனை துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. என்னதான் செய்தி என்கிறீர்களா? கீழே படியுங்கள்.

“விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்துள்ள எனது பெற்றோருக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திட உதவி செய்யுங்கள் என துபாயில் உள்ள துணைத் தூதகரத்திடம் கோரிக்கை வைத்தேன். சில பேருக்கு மட்டும் இத்தகைய முன்னெடுப்பு சாத்தியமில்லை. கணிசமான எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் அமீரக அரசுடன் இணைந்து அதற்கான முயற்சிகளை எடுப்போம் என துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஆகவே, அமீரகத்தில் வசித்துவரும் இந்தியர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துங்கள்”

மேலே உள்ளதுதான் கண்டென்ட். இதனுடன் துணைத் தூதரகத்தின் ஆன்லைன் சேவைப் பிரிவின் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழனாக இருந்தால் சேர் பண்ணு.. குரூப்பிடம் போட்டிபோடும் வகையில் இந்த மெசேஜ் சேர் செய்யப்பட்டிருக்கிறது. இதனை கவனித்த துபாயில் உள்ள துணைத் தூதரகம் திட்டவட்டமாக இச்செய்தியை மறுத்துள்ளது.

துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துப் பேசுகையில்,” எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. மக்கள் இதனை நம்பி பிறருக்கு சேர் செய்யவேண்டாம்” எனத் தெரிவித்தார்.