34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜா : பணமில்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் தவிக்கும் இந்தியத் தாய்!

-Sephali-Panigrahi-

ஷார்ஜா: குடும்பத்தின் ஒரே வருவாய் மூலமான குடும்பத் தலைவன், கொரோனா காரணமாக இந்தியாவில் சிக்கியிருக்கும் நிலையில், ஷார்ஜாவிலிருக்கும் அவரது குடும்பத்தின் கையிருப்பு முழுவதும் கரையும் நிலையில் உள்ளது.

அல் நஹ்தாவில் வசிக்கும் இரு மகள்களின் தாயான (17 வயது மற்றும் 12 வயது) சேபாலி பனிகிராஹி (Sephali Panigrahi) அவர்களின் குடும்பம் கிட்டத்தட்ட முழுதும் பணமில்லாத சூழ்நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

“இந்தியாவிற்கு சென்ற என் கணவர் நான்கு நாள்களில் திரும்பும் நம்பிக்கையோடு தனது கிரெடிட் கார்டை அலுவலக லாக்கரில் வைத்துப் பூட்டி சாவியை உடன் எடுத்து சென்றார்” என்றார் சேபாலி.

“அவர் அங்கு சிக்கிக் கொள்வார் என்று யார் நினைத்திருக்கக்கூடும்? நாங்கள் இங்கு கைவசம் இருந்த அனைத்து பணமும் செலவழிந்த நிலையில், எங்களுடைய கடைசி திர்ஹாமிற்கும் வந்துவிட்டோம். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பைக்கு அருகிலுள்ள பகுதியில் சிக்கியுள்ள அவரால், துரதிருஷ்டவசமாக அங்கிருந்தவாறு பணம் அனுப்ப முடியவில்லை.” என்றார் சேபாலி.

“எட்டாம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளின் பள்ளியிலிருந்து கட்டணத்தைச் செலுத்தும்படி இறுதி கெடுவும் விதிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை கட்டணத்தைச் செலுத்த தவறினால் இணையவழி கல்வியிலிருந்து அவளை நீக்கி விடுவதாகவும் பயமுறுத்துகின்றனர் பள்ளி நிர்வாகிகள். வங்கிகளில் இருந்தும் தவணைகளை செலுத்துமாறு எங்களுக்கு அழைப்புகள் வந்தபடி உள்ளன” என சேபாலி தெரிவித்தார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக வாழ் மக்கள் ஜுன் 1 முதல் நாடு திரும்ப முடியும். அதற்கு, அவர்கள் அரசு வகுக்கும் விதிமுறைகளுக்கு தகுதியடைந்திருக்க வேண்டும். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

தனது கணவரின் ஐசிஏ விண்ணப்பம் இனிதான் பரிசீலனைக்கு உள்ளாகி, அனுமதிக்கப்பட வேண்டும் என்பதால் சேபாலி நம்பிக்கை இழந்து வருகிறார்.

சேபாலியின் கணவர் தன் தந்தையை வீட்டில் சேர்ப்பதற்காக கடந்த மார்ச் 15 ஆம் தேதி இந்தியா சென்றுள்ளார்.

“மார்ச் மாதமே அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும். அவர் டயாபடிக் மற்றும் ஆஸ்துமா நோயாளியாவார். அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளூர் கடைகளில் கிடைக்காததால் நாங்கள் அவருடைய உடல்நிலையை நினைத்தும் கவலையடைந்துள்ளோம்” என்றார் சேபாலி.

இதையும் படிங்க.!