UAE Tamil Web

“அந்த போன் கால் வந்ததுமே என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது” – துபாய் டியூட்டி ஃப்ரீயில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்ற இந்தியர்..!

Dubai-Duty-Free-officials-conducted-the-draw-for-the-Dubai-Duty-Free-Millennium-Millionaire-and-Finest-Surprise-

துபாய் டியூட்டி ஃப்ரீயின் சமீபத்திய டிரா நேற்று துபாய் ஏர்ஷோவில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ரியான் வால்டிரோ என்பவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி மில்லினியம் மில்லியனர் டிரா 374 சீரிஸின் 0274 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ரியான் வாங்கியிருக்கிறார். 46 வயதான ரியான் Neuman & Esser Gulf FZE நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” உங்களுக்கு வரும் இந்த வெற்றிக்கான அழைப்பு உங்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடும். துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி. இந்த வெற்றி எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இந்தப் பணத்தினைக்கொண்டு எளியவர்களுக்கு உதவ இருக்கிறேன். மேலும் இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினர் மற்றும் எனது இரு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட உள்ளேன்” என்றார்.

1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லினர் டிரா துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆப்ரஹாமுடன் சேர்த்து இதுவரையில் 185 இந்தியர்கள் மில்லியனர் ஆகியிருக்கிறார்கள். பொதுவாகவே அமீரக வாழ் இந்தியர்கள் துபாய் டியூட்டி ஃப்ரீயில் அதிகளவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.

இதைத் தொடர்ந்து ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நடைபெற்றது. ஒரு சொகுசுக் கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளுக்கான வெற்றியாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டனர்.

கத்தாரைச் சேர்ந்த அப்துல்லா அல் குவைரி Mercedes Benz S500 காரை வென்றார். கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, 1786 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0828 என்ற எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த ஹரிஹரன் BMW R nineT Special 719 என்ற பைக்கை வென்றிருக்கிறார். இவர் 475 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0739 என்ற எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருந்தார்.

துபாயில் வசித்துவரும் பிலிப்பைன்சைச் சேர்ந்த ஜோச்சிம் பரோன் ரமோஸ் BMW F 900 XR என்ற பைக்கை வென்றிருக்கிறார். 12 வயதான ஜோச்சிமின் தந்தை ரொனால்ட் ரமோஸ் 427 வது ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா சீரிஸில் 0040 என்ற எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருந்தார்.

Dubai-Duty-Free-officials-conducted-the-draw-for-the-Dubai-Duty-Free-Millennium-Millionaire-and-Finest-Surprise-
2 Shares
Share via
Copy link