UAE Tamil Web

அமீரகத்தில் 9 நாட்களாக தேடப்பட்டுவந்த இந்தியர் வீடு திரும்பினார் – வழிதவறியதால் கிடைத்த அன்பு..!

indian in UAE

கேரளாவை சேர்ந்த ஆஷிக் செனோத் துரும்மல் (Ashik Chenoth Thurummal), கடந்த அக்டோபர் 15-ம் தேதி அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்து சேர்ந்தார். அபுதாபி சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலைக்கு செல்வதற்கு முன்பு, 14 நாள் குவாரன்டைனை முடிக்க அவர் காத்திருந்தார். இன்டர் நேஷனல் சிட்டியில் உள்ள பெர்ஷியன் கிளஸ்டரில் அவர் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை என அவரது நண்பர்கள் தேடத் துவங்கினர்.

- Advertisment -

காணாமல் போனதாக கூறப்படும் நபர் பற்றி புகார் கொடுத்தவரும், துபாய் குடியிருப்பாளருமான அஹ்சன் சிஏ தெரிவித்துள்ள தகவலில்,”என் சகோதரர் மற்றும் மற்றொரு பிளாட்மேட்டுடன் ஆஷிக் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கிருந்துதான் அவர் காணமல் போயிருக்கிறார்” என்றார்.

எங்கே சென்றார்?

ஹட்டா – ஓமான் சாலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, வெகுதூரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஆஷிக்கிற்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் லிஃப்ட் கொடுத்துள்ளார். ராஸ் அல் கைமாவிற்கு சென்ற பாகிஸ்தான் நபர், அந்த எமிரேட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, ஆஷிக்கை கீழே இறக்கிவிட்டிருக்கிறார்.

மீண்டும் ராஸ் அல் கைமாவிலிருந்து தனது அறைக்கு நடக்கத் துவங்கியிருக்கிறார் ஆஷிக். அப்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுனர் ஆஷிக்கிற்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். ஷார்ஜாவிற்குச் சென்ற அந்த ட்ரக்கில் ஏறிய ஆஷிக் கடந்தவாரம் முழுவதும் அந்த டிரைவருடைய அறையில் தங்கியிருந்திருக்கிறார்.

ஆஷிக்கிற்குத் தேவையான அனைத்தையும் அந்த ட்ரைவர் மற்றும் அவரது நண்பர்கள் வழங்கியிருக்கின்றனர். வழிதவறிச் சென்றவருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து அன்பு கிட்டியிருக்கிறது.

தனக்கு உதவியாளர் வேலை கிடைத்திருப்பதாகவும், அதில் ஸ்டாம்ப் பெற பாஸ்போர்ட் தேவைப்படுவதாகவும் ஆஷிக் தன்னிடம் கேட்டதாக அஹ்சன் தெரிவித்தார்.

“நாங்கள் அவரை தேடியது கூட அவருக்குத் தெரியவில்லை” என அஹ்சன் தெரிவித்தார்.