UAE Tamil Web

ஷார்ஜா: மசாஜ் நிலையத்தில் நிர்வாண வீடியோ: 4வது மாடியில் இருந்து குதித்த இந்தியர் கவலைக்கிடம்..!

Stock-Crime_

கடந்த வாரத்தில் ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து இந்தியர் ஒருவர் கீழே குதித்திருக்கிறார். இதுகுறித்து ஷார்ஜா காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளாடையுடன் தரையில் விழுந்து கிடந்தவரை அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

மசாஜ் வலை

சாலையில் வழங்கப்பட்ட மசாஜ் கார்டில் உள்ள முகவரியைப் பார்த்து, இடத்தைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் 30 வயதான இந்தியர். கதவைத் திறந்தது மட்டும்தான் பெண். மற்றபடி உள்ளே இருந்தது 6 ஆப்பிரிக்க ஆண்கள் மட்டுமே. அப்பாவி இந்தியரின் ஆடைகளை அபகரித்துக்கொண்ட இந்தக் கும்பல், அவரை வீடியோ வேறு எடுத்திருக்கிறது.

அதைவைத்து மிரட்டி, கிரெடிட் கார்டின் பாஸ்வேர்டை சொல்லும்படி இந்தியரை மிரட்டியிருக்கிறது அந்தக் குழு. இதிலிருந்து தப்பிக்க, இந்தியர் நான்காவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மிரட்டலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.