விமான பயணத்தின் போது இந்தியர் திடீர் மரணம் – அபுதாபி விமான நிலையத்தில் அவசர நிலை காரணமாக விமானம் தரை இறங்கியது.!!

இந்தியாவை சேர்ந்த பயணி விமான பயணத்தின் போது திடீர் மரணம், அவசர நிலை காரணமாக Alitalia விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரை இறக்கப்பட்டது.

கைலாஷ் சந்திரா சைனி (வயது 52) என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது மகன் ஹீரா லால் (வயது 26) உடன் நேற்று முன் தினம் Alitalia புது தில்லி – மிலன் விமானத்தில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் விமானம் அபுதாபி பன்னாட்டு விமான நிலையத்தில் அவசர நிலை காரணமாக தரை இறக்கப்பட்டது. மேலும், அவருடைய உடல் Mafraq மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறப்பு சான்றிதழ் வழங்கிய பிறகு உடலை இந்தியாவிற்கு Ethihad விமானம் உதவியுடன் இன்று காலை அனுப்பி வைக்கப்படும், என்று தூதரக ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: India Today

Loading...