துபாய் அல் டாய் பகுதியில் இரண்டு கும்பலுக்கு இடையேயான நடந்த மோதலில் 36 வயதுடைய முகேஷ் என்ற இந்தியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போலிஸ் அறிக்கையில், மார்ச் 17 அன்று உடைந்த பாட்டில்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மோதிக்கொண்டனர்.
இது குறித்து சோதனை நடத்திய சிஐடி குழுவினர் முகேஷின் இறந்த உடலையும், பலத்த காயமடைந்த மற்ற இரண்டு இந்தியர்களையும் மீட்டு ரஷித் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மேலும் உயிரிழந்த முகேஷின் உடல் தடயவியல் ஆய்வகத்தில் வைத்தனர்.
காவல்துறையின் விசாரணைக் குழு துபாய் அல் நஹ்தாவில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த குற்றவாளியை கண்டுபிடித்தது. பின்னர் ஷார்ஜா காவல்துறை உதவியுடன் இரண்டாவது குற்றவாளியான மற்றொரு நைஜீரியரை ஷார்ஜாவில் கைது செய்தது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி, 5 ஆண்டுகளுக்கு முன்பு அமீரகத்திற்கு வந்ததாகவும், தான் பணிபுரிந்த நிறுவனத்தில் குறைந்த சம்பளம் பெற்றதால், தற்போது கொள்ளை சம்பவங்களில் ஈடுப்படுவதாக ஒப்புக்கொண்டார்.
மூன்றாவது குற்றவாளியான மற்றொரு நைஜீரியரை காவல்துறைனர் தேடி வருகின்றனர், மேலும் இந்த வழக்கு குறித்து விசாரனையும் நடைபெற்று வருகிறது.