அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான அமைச்சர் டாக்டர். தானி பின் அகமது அல் ஸீயோதி அரசுமுறைப் பயணமாக புதுதில்லி சென்றுள்ளார். அங்கு இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை அவர் சந்தித்து இருநாட்டு வர்த்தக உறவுகள் குறித்து விவாதித்தார்.
நிலையான பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தம் (CEPA) இந்த சந்திப்பின்போது நிறைவேறியது. இந்நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக துறைச் செயலாளரான BVR சுப்ரமணியனும் உடனிருந்தார்.
அப்போது துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வு பெருவெற்றியடைய இந்தியாவின் சார்பில் வாழ்த்துவதாக கோயல் தெரிவித்தார். எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பெவிலியனை கோயல் திறந்து வைக்க இருக்கிறார்.
அப்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ மூலமாக வாழ்த்துரை வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகத்துறை வரவேற்பு அறிக்கையை வாசிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக துறைச் செயலாளரான BVR சுப்ரமணியனும் துபாய் எக்ஸ்போ 2020 ல் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
