இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.V.முரளீதரன் அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்திருக்கிறார்.
இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்துக்கோவிலை அமைச்சர் பார்வையிட்டார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்,” BAPS நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் அபுதாபி இந்துக்கோவிலின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். மத்திய கிழக்கில் கட்டப்படும் முதல் பிரம்மாண்ட கோவில் இதுவாகும். இங்கே சாம்பல் போன்ற இயற்கை பொருட்களைக்கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிவரும் அமீரக அரசுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போவின் அமீரக மற்றும் இந்திய பெவிலியனை முரளீதரன் பார்வையிட்டார்.
Visited the construction site of BAPS temple in Abu Dhabi.
Once built, it will be the first Traditional Stone Hindu Mandir in the Middle East.
Glad to learn about the environmental friendly green foundation utilizing fly ash.
Thank UAE Government for the consistent support. pic.twitter.com/XbwB9gh5s8
— V. Muraleedharan (@MOS_MEA) October 27, 2021
