UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020 ஐப் பார்வையிட்ட இந்திய அமைச்சர்..!

expo indian minister

இந்தியாவின் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.V.முரளீதரன் அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்திருக்கிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 ஐ இன்று அமைச்சர் பார்வையிட்டார்.

துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர் திரு.V. முரளீதரன் அவர்கள் இன்று அமீரக பெவிலியனை பார்வையிட்டார். தலைமைத் துணைத் தூதரான டாக்டர். அமன் பூரி அவர்களும் உடனிருந்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap