UAE Tamil Web

அமீரக மருத்துவமனையில் அயராது பாடுபட்ட “இந்திய செவிலியர்” – ஈத் பண்டிகையில் “பிறந்த மகிழ்ச்சி”

அமீரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ICUவில் பல சிக்கலான வழக்குகளைக் கையாள்வதில் தன்னை அர்ப்பணித்து வந்த நிலையில், அபுதாபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்ட செவிலியராக பணிபுரியும் ஷெரின் மேரி, ஈத் நள்ளிரவில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஷெரின் மேரி மற்றும் ரோனி அலெக்சாண்டர் தம்பதிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை நேற்று இரவு சரியாக பெருநாள் அன்று பிறந்துள்ளது பலருக்கு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது.

இந்திய தம்பதிகளான ஷெரின் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோருக்கு பிறந்த குழந்தையை அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஷெரினின் சக ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பிறந்த குழந்தையை வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவரது சகாக்களும் நண்பர்களும் அவர்களது குடும்பத்துடன் இணைந்தனர்.

அந்த பிஞ்சு குழந்தை சரியாய் ஈத் பெருநாள் அன்று 00.00 மணிக்கு மீடியோர் மருத்துவமனை, அபுதாபியில்
பிறந்துள்ளது. செரியா என்று அழைக்கப்படும் அந்த குழந்தை பிறக்கும்போது 2.860 கிலோ எடையுள்ள குழந்தையாக பிறந்துள்ளார் மேலும் அவர் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Medeor மருத்துவமனையில் ICU செவிலியராக, ஷெரின் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னணியில் பணியாற்றி வருகிறார். தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது சிக்கலான பல பெருந்தொற்று நோயாளிகளை அவர் கையாண்டார் மற்றும் நீண்ட கால பெருந்தொற்று நோயாளிகளுக்கு ICUவில் பல வாரங்கள் ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap