அமீரகத்திற்கு சுற்றுலா வந்த வயதான இந்திய தம்பதியின் மரணம் குறித்து ஷார்ஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
70 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், அல் நப்பா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள தங்கள் மகனின் குடியிருப்பில் இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறந்த இந்திய தம்பதியினரின் மகனிடமிருந்து பெற்றோரின் இறப்பு குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. வேலை முடிந்து அவர் வீடு திரும்பியபோது தந்து தாய் மற்றும் தந்தை இறந்து கிடப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அல் கர்ப் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இருப்பினும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்த அந்த இந்திய பெற்றோர்களின் மகனுக்கும் அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..