UAE Tamil Web

இந்தியாவில் கோவிஷீல்டு தான் போட்டுகிட்டேன்… துபாய் வர முடியாதுன்னு பலர் சொன்னாங்க..!

DXB AIRPORT

ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மக்கள் அமீரகம் திரும்பலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்தது. அதன்படி, ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். அமீரகத்தில் எடுக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றவர்கள் மட்டுமே, அமீரகம் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டாலும் அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை எடுத்தவர்களும் அமீரகம் வர அனுமதிக்கப்பட்டுவருகிறது.

இருப்பினும் இந்தியாவில் தடுப்பூசி பெற்றவர்கள் அமீரகம் வரலாமா? என்ற கேள்வி இன்னும் பலரையும் உலுக்கி வருகிறது. “அதெல்லாம் வரலாம் பாஸ்” என பதிலளித்திருக்கிறார் இந்தியாவின் ஷேக் அப்துல்லா (அவருடைய கோரிக்கையின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது).

புனேவைச் சேர்ந்த ஷேக் கடந்த ஷேக் துபாயில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய ஆண்டு விடுமுறை காரணமாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தாயகம் சென்றிருக்கிறார். பயணத்தடை விதிக்கப்பட்டதால் அவரால் அமீரகம் திரும்ப முடியாமல் போயிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அவர்,” ஒன்றரை மாத விடுமுறையில் சென்ற நான் அமீரகம் திரும்ப 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. GDRFA இணையதளத்தில் விண்ணப்பித்ததும் 50 நிமிடங்களில் எனக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தியாவில் நான் கோவிஷீல்டு எடுத்திருந்தேன். அதேபோல அமீரக அரசு விதித்திருந்த 48 மணிநேரத்திற்கு முந்தைய PCR டெஸ்ட், ரேபிட் டெஸ்ட் ஆகிவற்றையும் எடுத்திருந்தேன். அதனால் என்னால் எளிமையாக அமீரகம் திரும்ப முடிந்தது” என்றார்.

இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும். ஆகவே நீங்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்திருந்தால் தாராளமாக அமீரகம் திரும்பலாம். அதேநேரம் அமீரக அரசு விதித்திருக்கும் பிற பயணக் கட்டுப்பாடுகளை மறக்கவேண்டாம்.

DXB AIRPORT
14 Shares
Share via
Copy link