கடந்த 2 வருடங்களாக புஜைரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்தியாவைச் சேர்ந்த மகதப் கான் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். துபாயிலுள்ள இந்திய துணைத் தூதரகம் இதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
ஸ்ட்ரெச்சர் துணையுடன் கான் ஊர் செல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்க, அதற்கான செலவு மட்டும் அவருடன் மருத்துவர் ஒருவரை அனுப்பும் செலவையும் துணைத் தூதரகம் ஏற்றிருக்கிறது.
புஜைராவில் உள்ள இந்திய சமூக அமைப்பின் உதவியுடன் இந்த முயற்சியில் இறங்கியதாக துணைத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும் கான் என்னவிதமான உடல் நலக்குறைவை சந்தித்தார்? என்பதை துணைத் தூதரகம் குறிப்பிடவில்லை.
Consulate is #HappytoHelp Mr. Mahatab Khan, an Indian worker who was undergoing treatment in Fujairah Hospital since last 2 years. He was safely repatriated to India yesterday with a stretcher ticket and medical escort.
Thanks to Indian Social Club Fujairah for coordinating. pic.twitter.com/6aXPU4TT6e— India in Dubai (@cgidubai) October 17, 2021
