ஷார்ஜாவில் உள்ள ஜுபைர் என்ற பகுதியில், கேரளாவை சேர்ந்த சுதீர் குருவாயூர் ‘மினி கேரளா’ வை உருவாக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் குருவாயூர் என்பவர் ஷார்ஜாவில் Green Heaven Farm and Camping என்று மினி கேரளாவை உருவாக்கியுள்ளார். இந்திய விவசாயத்தில் ஆர்வலரான சுதீஷ், தனது தாயகமான கேரளாவில் உள்ள பசுமையான கிராமத்தை அமீரகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற கனவோடு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் பாலைவன மண்ணை ஒரு நெல்லாக மாற்ற கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எடுத்திருந்தாலும், ஷார்ஜாவின் அல் ஜுபைர் பகுதியின் மண்ணை நெல்லாக மாற்ற மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்தது. தனது கனவு திட்டத்தை நனவாக்க மூன்று மாதங்களுக்கு முன்பு அமீரக நாட்டச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு நிலத்தை பெற்றதாக சுதிர் கூறினார்.
நெற்பயிரின் நடுவில் ஒரு ஓலை வீடு, நீர்வீழ்ச்சிக்கு மேல் ஒரு கூடாரம், பாரம்பரிய மரப் படகு, மீன் மற்றும் பறவைகள், வயலில் விளையும் பல்வேறு காய்கறிகள், பெரிய மரங்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தியபடி, நிலத்தையும் கேரளாவில் உள்ள விவசாய கிராமம் போன்றே மாற்றி காட்சிக்கு வைத்துள்ளார்.
மேலும் சிறிய மலையை உருவாக்கி பாறைகளிலிருந்து தண்ணீர் ஒடுவதுபோல அருவியை அமைத்தோம், இந்த முழு பகுதிக்கும் அந்த சிறய பாறை அழகு சேர்கிறது என்றார் சுதீர்.
சுதீர் குருவாயூரின் இந்த Green Heaven Farm and Camping ஏற்கனவே பல நாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
பொதுமக்கள் பார்வைக்காக இந்த மினி விவசாய கிராமம் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 25 திர்ஹம்ஸ், 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 திர்ஹம்ஸ் என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் குடிசையில் அமர்ந்து உணவு (பார்பிக்யூ) வசதியுடன் சாப்பிட 699 திர்ஹம்ஸ் ஆகும்.
