UAE Tamil Web

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமீரகத்தின் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இந்தியர்கள் 3 மாதங்களுக்கு பின் விடுதலை!

ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டின் தீவில் இருந்து கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அமீரகத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் சவுதி அரேபியாவின் ஜசன் நகரிருக்கு புறப்பட்டது. அந்த சரக்கு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 14 மாலுமிகள் (கப்பல் ஓட்டிகள்) பயணித்தனர். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 14 பேரையும் கடத்தி மூன்று மாதங்கள் பிணையக் கைதிகளாக வைத்துள்ளனர்.

இது குறித்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், தற்போது 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சரான பத்ர் தெரிவித்துள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட அனியவரும் ஓமன் தலைநகர் மஸ்கெட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap