UAE Tamil Web

துபாயில் புதிய இடத்திற்கு இடம் பெயர தயாராகும் இந்திய பள்ளி..!

school

துபாயில் உள்ள குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் (Global Indian International School -GIIS) வரும் ஏப்ரல் மாதத்தில் (2021) மற்றொரு புதிய இடத்திற்கு இடம் பெற தயார் நிலையில் உள்ளது.

இப்பள்ளியானது 2017 இல் துபாயில் உள்ள பர்ஷா தெற்கில் (Barsha south) தொடங்கப்பட்டது முதல் இந்நாள் வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது இப்பள்ளி ஓரிரு மாதங்களில் மெய்டன் தெருவிலுள்ள (Meydan Street) அதிநவீன வளாகம் ஒன்றுக்கு மாற்றப்பட உள்ளது.

அமையவிருக்கும் புதிய இருப்பிடத்தில் பரந்த சுற்றுசூழல் மற்றும் சிறு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சமையல் மற்றும் தோட்டக்கலை போன்ற திறன்களை கற்பிக்கும் வெளிப்புற கற்றலுடன் கூடிய வசதிகள் அமையபெற்றுள்ளன.

மாணவர்களுக்கு வாய் மொழி அல்லாத தகவல் தொடர்புத் திறன்களை வளர்ப்பதற்கும், மாணவர்களுக்கு விலங்குகள் மீதான கருணை மற்றும் அன்பு போன்ற குணநலன்களை வெளிக்கொணர செல்லப்பிராணிகள் பூங்கா ஒன்றும் இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. மேலும் அணுகல் திறன், சிறந்த பாடத்திட்டம் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளோடு இந்த வளாகம் அமைய உள்ளது என்று GIIS துபாய் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இப்பள்ளியின் முதல்வர் ரமேஷ் முத்கல் (Ramesh Mudgal) கூறுகையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் எங்கள் புதிய வளாகத்திற்கு செல்லும்பொழுது எங்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் ஊழியர்களும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் பயன்களை பெறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களின் கலாச்சார பன்முகத்தன்மையை மதிப்பதோடு, முழுமையான சிறப்பான கல்வியை வழங்குவது மற்றும் கற்றல் திறனை மேலும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, எங்கள் மாணவர்கள் எளிமையாக கற்பிப்பதற்கும், வளர்வதற்கும் வாழ்ககையில் வெற்றி பெறுவதற்கும் இவ்வளாகம் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

அமீரகம் (UAE), சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 23 கேம்பஸ்களில் (campuses) 15000 க்கும் அதிகமான மாணவர்களோடு இயங்கி வரும் இப்பள்ளியில் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டம் மட்டுமல்லாது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு IB டிப்ளமோ ப்ரோக்ராம் (IB Diploma Programme) பாடத்திட்டத்தையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

school
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap