துபாயின் 67வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த உத்தம், மஹ்ஸூஸ் டிராவில் தனது மூன்றாவது முயற்சியில் இந்த வெற்றியைப் பெற்றார்.
வெற்றி பெற்றது குறித்து தெரிவித்த உத்தம், மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் வெற்றிப் பெற்றதாக எனக்கு மெயில் வந்தது, அதனை கண்டு நான் அடைந்த மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியாது. நான் முதலில் என் மனைவிக்கு தொடர்புக் கொண்ட பிறகு எனது சக ஊழியர்களிடம் செய்தியை பகிர்ந்து கொண்டேன். அனைவரும் உற்சாகம் அடைந்தனர்” என்றார்.
மேலும் தெரிவித்த உத்தம், இந்த பரிசுத் தொகையை தனது மகளின் கல்விக்காகவும், பொறுப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்த உள்ளேன். இந்த வெற்றி என்னைப் போன்ற ஒற்றை வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று தெரிவித்தார்.