UAE Tamil Web

லட்சத்தில் ஒருவருக்கு ஏற்பாடு அரிய வகை நோய்.. செய்வதறியாது தவித்த இந்திய பெண் – துபாய் டாக்டர்கள் செய்த புதிய சாதனை!

இந்த டிஜிட்டல் யுகத்திலும் மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. இந்நிலையில் மிக அரிதான விழுங்குதலில் உள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியப் பெண்மணி, நமது துபாய் மருத்துவர்களால் நலம்பெற்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீநிதி (வயது 26), தொடர்ந்து நெஞ்சுவலி, இருமல், எடை இழப்பு மற்றும் உணவு குழாயில் உணவு சிக்கிக்கொள்ளும் உணர்வு என்று பல் அசௌகரியங்களை அனுபவித்து வந்துள்ளார்.

பல மருத்துவர்களைச் சந்தித்துப் பல பரிசோதனைகளை செய்தபோதும் அவருக்கு பூரண குணமடையவில்லை. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளும் அவருடைய இந்த அவள நிலையைத் தணிக்கவில்லை. இந்த நிலையில் தான் நம்பிக்கை இழந்தவராக காணப்பட்டார் ஸ்ரீநிதி.

இறுதியில் கடந்த ஜூன் 2022ல், அவர் துபாயின் அல் ஜஹ்ரா மருத்துவமனையில் உள்ள ஒரு அனுபவமிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபிஸ்ட்டைச் சந்தித்தார். அவர் நோயாளியின் மருத்துவ வரலாற்றை உறுதிப்படுத்தி, எண்டோஸ்கோபி, உணவுக்குழாய் மனோமெட்ரி மற்றும் பேரியம் எய்டட் எக்ஸ்ரே ஆகியவற்றை நடத்திய பிறகு, ஒரு அரிதான நோய் ஸ்ரீநிதிக்கு இருப்பதை கண்டறிந்தார்.

உலகளவில் லட்சத்தில் ஒருவரை தான் Achalasia Cardia என்ற, ஒருவித விழுங்கும் கோளாறு நோய் தாக்குகிறது. இந்த நோயினால் உணவுக் குழாயில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்வதைக் கட்டுப்படுத்தும் ஸ்பிங்க்டர் தசையின் அழுத்தம் அதிகரிக்கிறது.

இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான சமீபத்திய மேம்பட்ட எண்டோஸ்கோபிக் செயல்முறையைச் செய்ய பயிற்சியும் திறமையும் பெற்ற UAEயில் உள்ள சில இரைப்பை குடல் மருத்துவர்களில் டாக்டர் முக்தேஷ் அவர்களும் ஒருவர்.

இறுதியில் ஸ்ரீநிதிக்கு பேரோரல் எண்டோஸ்கோபிக் மயோடோமி (POEM) என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீநிதி பூரண குணத்துடன் தனது வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நகர்த்தி வருகின்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap