UAE Tamil Web

துபாயில் படித்துக்கொண்டு கனடா நாட்டின் உயரிய ஸ்காலர்ஷிப் பெற்று இந்திய மாணவி சாதனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மாணவி கனடா நாட்டின் உயரிய ஸ்காலர்ஷிப்பை வென்றுள்ளார்.

Oud Metha-வில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவியான ராதா ஹரி கனடாவில் உள்ள ஹூரான் பல்கலைக்கழகத்தில் இருந்து 77,000 அமெரிக்க டாலர்கள் ஸ்காலர்ஷிப்பாக வென்று அசத்தியுள்ளார்.

இது குறித்து ராதா கூறுகையில், ஸ்காலர்ஷிப்பை பெறுவதன் மூலம், எனது பெற்றோரின் சுமையை குறைக்க முடியும். மேலும் இது எனது தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய கதவுகளைத் திறந்துள்ளது என கூறியுள்ளார்.

ராதா ஹரி நண்பர்களுடன் சேர்ந்து, கேர்ள் அப் என்ற கிளப்-ஐ திறந்தும் உள்ளார். மார்பக புற்றுநோய், மனநல பிரச்சினைகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கிளப் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap