பேருந்து விபத்தின் போது என்ன நடந்தது.? அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த கேரளாவை சேர்ந்தவர் விவரிக்கிறார்.!

Image Credit : Hindustan Times

கேரளாவை சேர்ந்த 29 வயதான நிதின் லாஜி என்பவர் இந்த பேருந்து கோர விபத்தில் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தை பற்றி அவர் கூறுகையில்; பேருந்து விபத்துக்குள்ளாகும் போது பேருந்தின் வலது புறம் நடுப்பகுதியில் அமர்ந்து இருந்ததாக அவர் கூறினார். பின்னர் பேருந்தில் உள்ளவர்கள் அலறும் சத்தம் கேட்டு, மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி விடலாம் என முடிவு செய்ததாக அவர் கூறினார்.

அதிகமானோர் வலது புறத்தில் அமர்ந்திருந்ததால் இந்த விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டது. பேருந்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்த வெள்ளம் தான், என்று அவர் கூறினார்.

விபத்திற்கு பிறகு பேருந்தில் உயிர் பிழைத்தவர்கள் வலியினால் துடித்தவர்களுக்கு உதவி செய்ததாகவும், லாஜி தன்னுடைய பங்கிற்கு வலியில் துடித்து கொண்டிருந்த பெண்ணுக்கு உதவி செய்ததாகவும், தற்போது அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாக கூறினார். இந்த விபத்தில் அதிஸ்டவாசமாக தான் உயிர் பிழைத்ததாகவும், இறந்தவர்களுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் லாஜி கூறினார்.

அவருக்கு முகத்தில் சிறிய கீறல் மட்டும் ஏற்பட்டது, ஒரு இரவு முழுவதும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருந்ததாகவும், இந்த விபத்தில் தன்னுடைய அனைத்து ஆவணங்களையும் தொலைத்து விட்டதாக லாஜி கூறினார்.

Source : Khaleej Times

Loading...