மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் அமரர் திரு. ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அபுதாபி வந்தடைந்தார்.
அமீரகத்தின் வெளியுறவு துறை (MEA) நேற்று சனிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்திய துணை ஜனாதிபதி நாயுடு அவர்கள் இன்று மே 15 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் வந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமைக்கு இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்து நினைவுகூரத்தக்கது.
ஷேக் கலீபாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு சனிக்கிழமை சென்று இந்தியாவின் இரங்கலை தெரிவித்தார்.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில், இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மறைந்த ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் கலீபாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய அரசு நேற்று சனிக்கிழமை தேசிய துக்கம் அனுசரித்தது. ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் தங்கள் இரங்கல்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பல வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்கள் கடந்த மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று துவங்கி நாளை வரை அமீரகத்தில் துக்க தினங்கள் அனுசரிக்கப்படுகிறது.