29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

முதல் முறையாக எனது மகளைப் பார்க்கப் போகிறேன் – 14 ஆண்டுகள் அமீரகத்தில் தவித்த இந்தியரின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம்..!

NAT-Baskari-Raghavlu-

தனது முதல் குழந்தை நடக்கத் துவங்கிய காலத்திலேயே, கர்ப்பமாக இருந்த தனது மனைவியை விட்டுவிட்டு வேலைதேடி விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்திருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கரி ராகவலு. வறுமை எல்லாம் தங்களோடு போகட்டும், தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் சிறப்பான எதிர்காலத்தினை வழங்கவேண்டும் என்பது மட்டும்தான் ராகவலுவிற்குத் தோன்றியிருக்கிறது. விசிட்டிங் விசாவில் அமீரகம் வருகிறார். ஆண்டு 2006.

வாழ்வினை மாற்றிய விபத்து

விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்த ராகவலு இங்கே ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஒரு நாள் கம்பெனிக்குச் சொந்தமான வாகனத்தில் வேலைசெய்யும் இடத்திற்குப் பயணிக்கும் போது வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் அவருக்கு கை, கால் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கம்பெனி மீது வழக்குத் தொடுத்தார் ராகவலு. வழக்கறிஞர் ஒருவரை சந்தித்த ராகவலு அவர் கேட்டதன் பேரில் அவரிடம் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் ராகவலு அமீரகம் வந்த ஒரு மாத காலத்திற்குள் நடந்திருக்கின்றன.

தான் பணிசெய்த கம்பெனியில் இருந்து இழப்பீடு பெற நான்கு வருடம் முயற்சித்திருக்கிறார் ராகவலு. எவ்வித பயனும் கிட்டவில்லை. அந்த வழக்கறிஞரும் ஒருநாள் தனது பாஸ்போர்ட்டுடன் தலைமறைவாகவே, வேறு வழியில்லாமல் கிடைத்த வேலைகளை செய்துகொண்டு அதன்மூலம் மாதாமாதம் வீட்டிற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார் ராகவலு. இருப்பினும் கடைசி மூன்று வருடங்களாக அவரால் முன்பைப்போல வீட்டிற்கு பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை என்கிறார்.

தவறவிட்ட வாய்ப்பு

அமீரக அரசு இதற்கு முன்னர் கருணைகால அறிவிப்பை வெளியிட்டிருந்தபோது அதற்காக முயற்சி செய்திருக்கிறார் ராகவலு. எப்படியாவது இந்தியா சென்றுவிட்டால் போதும். மீதி காலத்தினை மனைவி மக்களோடு கழித்துவிடத் துடித்த இவரால் கடைசி நேரத்தில் விமான டிக்கெட்டிற்கு பணம் செலுத்த முடியாமல் போகவே, நடப்பது நடக்கட்டும் என நம்பிக்கையை இழந்துவிட்டார்.

கொரோனா ராகவலு வாழ்க்கையையும் பாதாளத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது. கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானமும் இல்லாமல் போனபோது, உடைந்திருந்த ராகவலுக்கு ஷீலா தாமஸ் என்னும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரைப் பற்றித் தெரியவந்திருக்கிறது.

அமீரகத்தில் வேலையிழந்து, நாடு திரும்ப முடியாமல் கஷ்டப்படும் இந்தியர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை செய்துவரும் இந்தியாவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஷீலா தாமஸைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

செப்டம்பர் 26 ஆம் தேதி விமானம்

ராகவலு தனது கரைந்துபோன ஆசைகளை ஷீலாவிடம் தெரிவிக்க அவரும் உதவுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருடைய முயற்சிகளால் தற்போது ராகவலுக்கு விதிக்கப்பட்டிருந்த 511,200 திர்ஹம்ஸ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

“தங்குமிடம் கிடைக்காமல் தவித்த இவருக்கு (ராகவலு) சில நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் உதவ முன்வந்ததன் மூலமாக அவர்களுடன் தங்கிக்கொண்டார். வெளியே உறுதியானவராக இருக்கும் ராகவலு மனதளவில் மிகவும் உடைந்துபோயிருக்கிறார்” என ஷீலா தாமஸ் தெரிவித்தார்.

ராகவலுவின் விமான டிக்கெட் செலவினை ஷீலா ஏற்றுக்கொண்டிருக்கிறார். செப்டம்பர் 26 ஆம் தேதி மும்பை செல்லும் விமானத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்ப இருக்கிறார் ராகவலு.

எனது மகளைப் பார்க்கப் போகிறேன்

“எப்போது நாடு திரும்புவேன் என ஆவலாக இருக்கிறேன். அமீரகம் வருகையில் மனைவியின் கர்ப்பத்தில் இருந்த எனது மகளை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை. இப்போது எனது அனைத்து கஷ்ட காலங்களும் மலையேறிவிட்டன எனத் தோன்றுகிறது. பல வருடங்கள் கழித்து நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நான் ஊருக்குப் போகிறேன்; எனது குடும்பத்தை, எனது மகளைப் பார்க்கப் போகிறேன்” – என ராகவலு குஷியுடன் தெரிவித்தார்.error: Alert: Content is protected !!